மர்மான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

மாத்தறை காவல் பிரிவில் உள்ள பரவி தீவுக்குச் செல்லும் பாலத்தின் கீழ் கடலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர். சம்பவம் குறித்து மாத்தறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles