Monday, February 2, 2026
HomeHoroscopeஇந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் இலகிய மனம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் நிலையை கண்டு மனதார உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி மற்றவர்களுக்கு உதவிசெய்யும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களை விடவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு கடவுள் மீதும் ஆன்மிக செயல்கள் மீதும் அதீத ஆர்வம் காணப்படுவதால், இயல்பிலேயே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களினடம் யாராவது உதவி என்று கேட்டுவிட்டால், தங்களால் முடியாத போதும் கூட உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் கற்பனை செய்வதிலும் மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலே புரிந்துக்கொள்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.

இயல்பாகவே மென்மையாக மனம் கொண்ட இவர்கள் சமூக சேவைகளிலும், உறவுகளை பராமரிப்பதிலும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த ராசியினர் தங்களுக்கே இல்லாத போதும் கூட பிறருக்கு உதவி செய்யும் குணத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்

அன்பின் கிரகமான சுக்கிரகின் ஆதிகத்தில் பிறந்த ரிஷப ராசியினர் இயல்பாகவே எல்லோரிடமும் மிகவும் அன்பாக நடந்துக்கொள்வார்கள்.

இவர்கள் மற்றவர்களை புரிந்து நடந்துக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். வாழ்வில் எத்தனை முறை மற்றவரை்களால் ஏமாற்றத்தை சந்தித்தாலும், மற்றவர்களுக்கு உதவுவதை நிறுத்தவே மாட்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular