ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை கைது செய்வதற்கு அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப் பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, யாஷ் தயாள் தன்னிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடு பட்டதாகக் குறித்த பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன் அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும் குறித்த பெண் காவல் நிலையத்தில் முறைப் பாடளித்திருந்தார்.
இதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து யாஷ் தயாள் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
