Monday, February 2, 2026
HomeSportsஒரே ஆண்டில் ரூ.9,741 கோடி வருவாய் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்

ஒரே ஆண்டில் ரூ.9,741 கோடி வருவாய் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2023-24-ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.9,741.7 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.பி.எல்.லின் பங்களிப்பு ரூ.5,761-ஆக உள்ளது.

சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் உள்பட ஐ.பி.எல் அல்லாத ஊடக உரிமைகளை விற்றதன் மூலம் ரூ.361 கோடி கிடைத்தது. கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வட்டியை ஈட்டுகிறது. ஸ்பான்சர்ஷிப்கள், ஊடக ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி நாள் வருவாய் உள்ளிட்டவை மூலம் கணிசமான வருவாய் வருகிறது.

இந்த வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர், கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular