Monday, February 2, 2026
HomeMain Newsபிரபஞ்சத்தின் முடிவு விரைவில்? – புதிய ஆய்வு அதிர்ச்சி தகவல்

பிரபஞ்சத்தின் முடிவு விரைவில்? – புதிய ஆய்வு அதிர்ச்சி தகவல்

நாம் வாழும் பிரபஞ்சம் முடிவுக்கு செல்லும் காலம் எதிர்பார்த்ததைவிட விரைவில் இருக்கலாம் என சமீபத்திய வானியல் ஆய்வு எச்சரிக்கிறது.

“The Lifespan of our Universe” எனும் புதிய ஆய்வுக் கட்டுரை, பிரபஞ்சம் இன்னும் 10 பில்லியன் ஆண்டுகளில் விரிவடைவதை நிறுத்தி, பின்னர் சுருங்கத் தொடங்கும் எனக் கூறுகிறது.

பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு காரணமான ‘Dark Energy’ நிரந்தரமல்ல என்றும், அது மெதுவாக மாறி, எதிர்மறை சக்தியாக மாறலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பிரபஞ்சம் “Big Crunch” எனப்படும் நிலைக்குச் சென்று, இறுதியில் முழுமையாக சுருங்கி அழியும் என கருதப்படுகிறது.

இந்த கோட்பாடு, DES மற்றும் DESI திட்டங்களில் பணிபுரியும் வானியலாளர்களால் முன்வைக்கப்பட்டது. தற்போதைக்கு இது அனுமானத்திற்குட்பட்டதாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் முடிவைப் பற்றிய புதிய பார்வையை அளிக்கிறது.

எனினும், இது தற்போதைய அறிவியலுக்கு சவால் விளைவிக்கும் அளவுக்கு புதியதாகவும் பரபரப்பாகவும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular