Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryநியூசிலாந்தில் முதல் அலுவலகத்தை திறந்த FBI

நியூசிலாந்தில் முதல் அலுவலகத்தை திறந்த FBI

அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பு (FBI), நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.தனித்து இயங்கக்கூடிய இந்தப் புதிய அலுவலகம், பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கும் நியூசிலாந்திற்கும் உதவும் என்று அமைப்பின் இயக்குநர் காஷ் பட்டேல் வியாழக்கிழமை (ஜூலை 31) கூறினார்.

தென்மேற்குப் பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் முக்கியப் பங்காளித்துவ நாடுகளில் ஒன்றான நியூசிலாந்துடன் அமெரிக்காவின் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்த அலுவலகம் உதவும் என்றார் பட்டேல்.

நியூசிலாந்தும் அமெரிக்காவும் சில முக்கியமான உலகளாவிய விவகாரங்களில் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவை தொடர்பான பதில் நடவடிக்கைகளை அவர் சுட்டினார். மேலும், இணைய ஊடுருவல் சம்பவங்கள், பிணைநிரல் சம்பவங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் குறிப்பாக இரு நாட்டுக் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அமெரிக்காவும் நியூசிலாந்தும் கூட்டாகச் செயல்படுவதாகத் பட்டேல் குறிப்பிட்டார்.

வெலிங்டனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் உரையாற்றும் காணொளி வெளியிடப்பட்டது.

2017ஆம் ஆண்டு முதல் ‘FBI’ அமைப்பின் கிளை அலுவலகம் நியூசிலாந்தில் இயங்கிவந்தது. இரு நாடுகளும் திட்டமிட்ட குற்றச்செயல்கள், நியாயமற்ற முறையில் சிறாருக்குத் தீங்கிழைத்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் அணுக்கமாகப் பணியாற்றிவருகின்றன.

பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது தொடர்பான கவலை நிலவும் வேளையில் இவ்விரு நாடுகளும் மேலும் அணுக்கமாகப் பணியாற்றுகின்றன.ஐந்து நாடுகளுக்கு இடையிலான உளவுத் தகவல் பங்காளித்துவத்தில் (Five Eyes) இரு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

Previous article
புதன்கிழமை மாலையில் மூன்று இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை நோக்கி ஐந்து ட்ரோன்களை ஏவியதாக ஏமனின் ஹவுத்தி குழு ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய அறிக்கையில், குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா, ஐந்து ட்ரோன்கள் டெல் அவிவ், அஷ்கெலோன் மற்றும் நெகேவ் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறினார். நடவடிக்கை வெற்றிகரமாக இருந்ததாகவும் இலக்குகளைத் தாக்கியதாகவும் அவர் கூறினார். மாலையில் முன்னதாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஒரு அறிக்கையில், ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ட்ரோன் இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பு இடைமறித்ததாகக் கூறியது. தாக்குதலில் இருந்து எந்த வான்வழித் தாக்குதல் சைரன்களும் இயக்கப்படவில்லை என்றும் அது மேலும் கூறியது. செவ்வாய்க்கிழமை மாலை ஹவுத்தி ஏவுகணைத் தாக்குதலை இடைமறித்ததாக IDF தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலுக்கு எதிரான இரண்டாவது ஹவுத்தி தாக்குதல் இதுவாகும். வடக்கு ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்தி குழு, காசாவில் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையைக் காட்ட நவம்பர் 2023 முதல் இஸ்ரேலை குறிவைத்து வருகிறது.
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular