கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு போதுமான உடற்தகுதியும் தேவை என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு கண்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தோனி இதன்போது தெரிவித்தார்.
மேலும் “கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே. உடற்தகுதி பற்றியும் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
