Monday, February 2, 2026
HomeCinemaஅனுபமா பரமேஸ்வரன் நடித்த `பரதா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

அனுபமா பரமேஸ்வரன் நடித்த `பரதா’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து ‘ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா’ திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து அனுபமா பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஐதரபாத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிரார், அவர் ஒரு பயணத்டில் மற்ற பெண்கமற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

படத்தில் சங்கீதா க்ரிஷ் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரிக்க கோபி சுந்தர் இசையை மேற்கொண்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular