Monday, February 2, 2026
HomeMain NewsEuropeபழமையான தேவாலயத்தை இடமாற்றும் சுவீடன்

பழமையான தேவாலயத்தை இடமாற்றும் சுவீடன்

சுவீடன் – Kiruna நகரில் உள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை அங்குள்ள அரசாங்கம் முழுமையாக வேறு இடத்துக்கு மாற்றுகிறது.

உருளும் மேடையின் மீது தேவாலயம் தூக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மேடை மணிக்கு 500 மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

தற்போதுள்ள இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மாற்றப்படுகிறது இத்தேவாலயம்.

நூற்றாண்டு பழமையான தாது சுரங்கம் அருகே இருக்கும் பகுதியில் பிளவுகள் ஏற்பட்டதால் தேவாலயம் தொடர்ந்து அங்கிருப்பது பாதுகாப்பல்ல என்று முடிவெடுக்கப்பட்டது.

தேவாலய இடமாற்றம் ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

உள்ளூர்வாசிகளின் மனத்தில் தேவாலயம் முக்கியமான இடம்பிடித்திருப்பதால் அதை அவர்கள் பேணிக்காக்க விரும்புகிறார்கள்.

சுவீடனின் தொலைக்காட்சிகள், தேவாலயம் இடம் மாற்றப்படுவதை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular