கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம்…!

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தை ஆரம்பித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட நிலையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக, இன்று (22) காலை முதல் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தைச் சுற்றி விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில குழுக்கள் இடையூறு விளைவித்ததை அடுத்து, காவல்துறையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய பணிப்புறக்கணிப்பு இன்று ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது.

இதன் விளைவாக, பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்கச் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அகில இலங்கை துணை அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் பொருளாளர் ரவீந்திர அமரஜீவ, சக தொழிற்சங்க பிரதிநிதிகளை வலியுறுத்தியுள்ளார்.

இன்று பணிக்கு வராத அனைத்து அஞ்சல் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையை வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles