Tuesday, February 3, 2026
HomeSportsஅரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை7-6 (7-2) என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்டன் ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

US ,OpenTennis, Yuki Bhambri

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular