மட்டக்களப்பு எறாவூர் பழைய பாடசாலை மைதானத்தில் 4 கைக்குண்டுகள் மீட்பு..!

மட்டக்களப்பு, எறாவூர் தேர்தல் நிலையம் அமைந்துள்ள பழைய பாடசாலைக்கு அருகிலுள்ள மைதானத்தில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (09) இந்த அகழ்வு நடத்தப்பட்டது.

பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகேயின் தலைமையில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles