Monday, February 2, 2026
HomeSportsஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையீடு

ஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையீடு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணி கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதனால் ஒரு ஜென்டில்மேனாக அவர் பரிசளிப்பு விழாவில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆசிய கோப்பை எங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிடப்படும். விரைவில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தேவ்ஜித் சாய்க்கியா கூறியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular