Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaதிருத்தப்பட்ட முதலீட்டாளர் பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியது இலங்கை

திருத்தப்பட்ட முதலீட்டாளர் பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியது இலங்கை

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, இலங்கை அதன் திருத்தப்பட்ட “தனிநபர் முதலீட்டாளர்” பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.

இதன்படி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, இன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வைத்திய பே ட்ரெச்செல்லுக்கு தொடக்க விசாவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பிரஜைகள் குறைந்தபட்சம் USD 100,000 முதலீடு செய்வதன் மூலம் ஐந்து வருட வதிவிட விசாவைப் பெறலாம்.

அத்துடன் USD 200,000 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதன் மூலம் 10 வருட வதிவிட விசாவைப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் இலங்கையில் உள்ள எந்தவொரு உரிமம் பெற்ற வணிக வங்கியிலும் விசா திட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கை (VPFCA) திறந்து நிதியை வாய்ப்பு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மூலதனத்தை அர்ப்பணிக்கும் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குடியிருப்பு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular