காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் – டிரம்ப்

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

கடந்த திங்களன்று இஸ்ரேல் இந்த அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹாமாஸ் ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.

அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அவரின் சொந்த சமூக வலைதள பதவில், ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.

இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்!

இப்போது, தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles