Monday, February 2, 2026
HomeSportsமுதல் டெஸ்ட்: 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

முதல் டெஸ்ட்: 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் 12-ந் தேதி தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

109 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன்- மார்க்ரம் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 3 ரன்னிலும் அடுத்த வந்த முல்டர் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து வந்த டோனி டி சோர்ஸி- ரிக்கல்டனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஆனால் இவர்களது நிதானமான ஆட்டம் கைகொடுக்கவில்லை. சோர்ஸி 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில் களமிறங்கிய பிரெவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 54 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரிக்கல்டனும் 45 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 60.5 ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி, அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நோமன் அலி தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

PAK,SA, test, cricket

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular