கிரிபத்கொடை நகரில் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக கொழும்பு-கண்டி வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
#Kiribathgoda #FireBreaking #TrafficAlert #ColomboKandyRoad #SriLanka #LKA #Emergency #FireFighters #LiveUpdate
