Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமருதங்கேணியில் குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது

மருதங்கேணியில் குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று வியாழக்கிழமை   மாலை கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவரான தவநேசன் (வயது- 40) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

குறித்த குடும்பஸ்தர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், நள்ளிரவில் சந்தேக நபரை மருதங்கேணி பொலிஸார் கைது செய்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular