வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் பயணித்த ஓட்டோ ஒன்று விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டது.
ஓட்டோவை சோதனை செய்தபோது அதிலிருந்து 2 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
