
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு இன்று வெள்ளிக்கிழமை உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் காலில் விழுந்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து , நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
