Monday, February 2, 2026
HomeMain Newsவயல் காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்கி மரணம்! முல்லைத்தீவில் சம்பவம்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்கி மரணம்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular