Monday, February 2, 2026
HomeCinemaதிருவாசகத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு

திருவாசகத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு

திருவாசகத்தின் முதல் பாடல் நாளை 22ஆம் திகதி ஜி.வி.பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

திருவாசகம் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular