Monday, February 2, 2026
HomeCinema1,000 கோடி ரூபா வசூலித்து 'துரந்தர்' இந்திப் படம் சாதனை

1,000 கோடி ரூபா வசூலித்து ‘துரந்தர்’ இந்திப் படம் சாதனை

ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது.

ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய் கன்​னா, அர்​ஜுன் ராம்​பால், சாரா அர்​ஜுன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ‘உரி: தி சர்​ஜிகல் ஸ்டிரைக்’ என்ற படத்தை இயக்​கிய ஆதித்யா தார் இயக்கி உள்​ளார். ‘ஸ்பை த்ரில்​லர்’ படமான இது, உளவு அதி​காரியை பற்​றிய கதையைக் கொண்​டது.

இந்த மூன்​றரை மணி நேரப் படம் வெளி​யான நாளி​லிருந்து அதிக வசூல் ஈட்டி வந்​தது. இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் மட்​டும் இது​வரை ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’, ‘கேஜிஎப் 2’, ‘புஷ்பா 2’ படங்​களுக்​குப் பிறகு இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த நான்​காவது படமாக ‘துரந்​தர்’ இடம்​பெற்​றுள்​ளது.

கடந்த ஆண்டு டிச.5ஆம் திகதி வெளி​யான இப்​படம் இப்போது வரை இந்​தியாவில் ரூ.1,002 கோடி வசூல் ஈட்டியுள்​ளது. இதற்கு முன், ‘புஷ்பா 2’ ரூ.1,471 கோடி​யும் ‘பாகுபலி 2’ ரூ.1417 கோடி​யும், ‘கேஜிஎஃப் 2’ ரூ.1,001 கோடியும் இந்​தி​யா​வில்​ மட்​டும்​ வசூல்​ ஈட்டி​உள்​ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular