Friday, February 6, 2026
HomeMain Newsவவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் மரணம்!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் மரணம்!

வுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரு மாணவர்கள் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்தார்.

இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கரிஸ்ணன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular