Wednesday, February 11, 2026
spot_img
HomeMain Newsதிருமலை புத்தர் சிலை விவகாரம்: 4 பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

திருமலை புத்தர் சிலை விவகாரம்: 4 பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ உள்ளிட்ட நான்கு பிக்குகளுக்கும் மேலும் 5 சந்தேநகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பம் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் இன்று பிணை உத்தரவை வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular