Wednesday, February 18, 2026
HomeMain Newsமண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் IMFமுகாமைத்துவ பணிப்பாளர்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் IMFமுகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular