Friday, February 20, 2026
HomeMain Newsபிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை சரணடையவைக்க ராஜபக்ஷ முயற்சித்தார் - பொன்சேகா குற்றச்சாட்டு

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை சரணடையவைக்க ராஜபக்ஷ முயற்சித்தார் – பொன்சேகா குற்றச்சாட்டு

ராஜபக்ஷக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க முயற்சி செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்க்ஷ, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடினர் என பொன்சேகா கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்ஷக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர்.

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ராஜபக்ஷக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.

குறிப்பிட்ட நாளில், தான் சீனாவில் இருந்ததார் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபையுடனான மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொன்சேகா குறிப்பிட்டார்.

மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, ​​விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீற்றர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார்.

ராஜபக்‌ஷவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular