பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது எனவும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நேற்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளரால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

















