#image_title

முன்னணி நட்சத்திரங்களான ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுக புரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் புரோமோக்கள் போலவே, இப்படத்தின் புரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக நெல்சன் உருவாக்கியுள்ளார்

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். அதன்பின்னர், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்தே ரஜினி – கமல் இணையும் படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளார்.

author avatar
Selvarajah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here