#image_title

காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயில் கப் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர் என்று பொலிஸார் கூறினர்.

ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கப் ரக வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்து செல்லப்பட்டிருந்தது.

இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கடவை பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
Selvarajah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here