#image_title

நேபாளத்தில் காத்மண்டுவை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போகாராவிலிருந்து காத்மண்டு நோக்கி 44 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த பஸ்ஸினுள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி மீட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும் 8 பெண்கள், 18 ஆண்கள், ஒரு சிறுமி உள்ளிட்டோர் 27 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here