திருத்தந்தை 14ஆம் லியோவை இலங்கை வருகை தருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று வத்திக்கானில் வைத்து இதற்கான அழைப்பிதழை ஒப்படைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் வருகையானது, இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
