மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 300 இற்கும் அதிகமான மக்களைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.
இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

