நோர்வேயிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தூதரகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே வெடிகுண்டு வெடித்ததாகவும், இதனால் சிறு காயங்கள் மற்றும் சேதம் ஏற்பட்டதாகவும் நோர்வே இப்போது உறுதிப்படுத்தியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க , இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டு தூதரகங்கள் இலக்கு வைக்கபடலாமென அஞ்சப்படுகிறது.

