கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்த ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் சாய் பல்லவி நாயகியாகவும் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதை இயக்குநர் மணிரத்னம் இப்போது உறுதி செய்துள்ளார்.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவில்லை என்றும் சாய் அபயங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அதை மறுத்துள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை அமைக்கிறார் என்று அறிவித்துள்ளது.
இப்படத்தை லைகா புரொடக் ஷன்ஸ் வழங்குகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சோனி மியூசிக் நிறுவனம் இதன் இசை உரிமையை பெற்றுள்ளது.
