செம்பியன்பற்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் (21) வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் வீட்டில் வசித்த நபரின் உறவினருக்கு அறிவித்துள்ளனர் .

உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்

முதல் கட்ட விசாரணையில் சடலமாக காணப்பட்டவர் செம்பியன்பற்று வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை செல்வசிங்கம் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles