மன்னார் கடல் பகுதியில் இன்று (15) இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்நிலையில் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவர் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மீனவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
