அமெரிக்க இராணுவ கப்பல்களின்மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் அரசுக்கு சொந்தமான தஸ்னிம் ஊடகமே மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
எனினும்இ இந்தத் தாக்குதலால் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக ஓமான் வளைகுடா அருகே ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
இதனை போர் நிறுத்த மீறல் என்று குறிப்பிட்ட ஈரானின் உயர் கட்டளைப் பீடமான கதம் அல் -அன்பியா மத்திய தலைமையகம் அமெரிக்காவின் இந்த ஆயுதமேந்திய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
