ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா – பதிலடி கொடுக்கப்படும் என்கிறது ஈரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் மிக முக்கியப் படைப்பிரிவான் யுஎஸ் மரைன்ஸ், அந்த வழியாகச் சென்ற ஈரான் கொடி பறந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இரு தரப்புக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், பாகிஸ்தான் அரசு எடுத்த சமரச முயற்சி காரணமாக இரு வார காலத்துக்கான போர் நிறுத்தம் கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இந்த மாதத்தின் 2ஆவது வாரத்தில் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles