இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை 48 மணிநேரத்தில் முறித்துக்கொள்ள ஸ்பெய்ன் வலியுறுத்தல்

இஸ்ரேலுடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ சான்செஸ், ‘இஸ்ரேலுடனான தனது கூட்டமைப்பை இந்த செவ்வாய்க்கிழமைக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவை ஸ்பெயின் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கும்.

ஸ்பெயின், இஸ்ரேலின் நண்பன்தான். ஆனால், அந்த நாடு தனது நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே, ஸ்பெயின் முன்னெடுக்கும் இந்த கோரிக்கையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. நாடுகளுக்கு இடையேயான உறவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கான மரியாதை மிகவும் முக்கியம்.

இவ்விஷயத்தில் இஸ்ரேல் இதை கருத்தில் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இஸ்ரேலின் உறவுக்கு அடிப்படையாக இருக்கும் ஒப்பந்தத்தின் பல விதிகளை அந்த நாடு காலில் போட்டு மிதிக்கிறது. எனவேதான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ராஜதந்திர போரை ஸ்பெய்ன் நடத்துகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles