ஈரானுக்கு சீனா அனுப்பிய ஏவுகணை தயாரிக்கும் இரசாயனம்

ஏவு​கணை​கள் தயாரிக்க உதவும் இரசாயனங்​களை ஈரானுக்கு சீனா அனுப்​பி​யுள்​ளது என்று அமெரிக்​கா​விலுள்ள குடியரசுக் கட்​சி​யின் நிர்​வாகி நிக்கி ஹாலே தெரி​வித்​துள்​ளார். மேலும் இதற்​கான ஆதா​ரங்​களை​யும் அவர் வெளி​யிட்​டுள்​ளார்.

அமெரிக்கா மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே போர் காரணமாக ஹோர்​முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்​நிலை​யில் அமெரிக்கா​வுக்​கான ஐ.நா. தூத​ராக பணி​யாற்​றிய​வரும், தற்​போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்​சி​யின் நிர்​வாகி​யு​மான நிக்​கி ஹாலே எக்ஸ் சமூக வலை​தளத்​தில் சில ஆதா​ரங்​களை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது – கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்து ஏவுகணைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான இரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனா​விலிருந்து ஈரானுக்கு இரகசி​ய​மாக அனுப்பி வைக்​கப்​பட்​ட​வை. இதுதொடர்​பான சில புகைப்​படங்​கள் மற்​றும் ஆதா​ரங்​களை சமர்ப்​பித்​துள்​ளேன்.

ஈரான் தனது ரகசி​யத் திட்​டங்​களை மறைப்​ப​தற்​காக சீனாவைப் பயன்​படுத்​திக் கொள்​கிறதா என்ற கேள்வி எழுகிறது. கப்​பலில் இருந்த இரசாயனப் பொருட்​கள் சீன நிறு​வனங்​களிட​மிருந்து பெறப்​பட்​டதற்​கான முத்​திரைகள் இருக்​கின்​றன. இதன் மூலம் உலக நாடு​களை ஈரான் ஏமாற்றி வரு​கிறது.

ஈரானின் இந்த நடவடிக்கை அணுசக்தி ஒப்​பந்​தத்தை மீறு​வது மட்​டுமல்​லாமல், உலக அமை​திக்கே ஒரு மிகப்​பெரிய சவாலாக உள்​ளது. அமெரிக்​கா​வின் நட்பு நாடு​களை அச்​சுறுத்​தும் வகை​யில் ஈரான் தனது ஏவு​கணைத் திட்​டத்தை வலுப்​படுத்தி வரு​வதை அமெரிக்கா ஒரு​போதும் அனு​ம​திக்​காது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா​வின் இந்த அதிரடி சோதனை மற்​றும் கப்​பல் சிறைபிடிப்பு நடவடிக்​கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், நிக்கி ஹாலே​யின் இந்த அறி​விப்பு ஈரான் நாட்​டுக்கு மேலும் நெருக்​கடியை கொடுத்​துள்​ளது.

அதே​நேரத்​தில், அமெரிக்​கா​வின் இந்​தக் குற்​றச்​சாட்​டு​களை ஈரான் முற்​றி​லும் மறுத்​துள்​ளது. அமெரிக்கா திட்​ட​மிட்டு ஒரு நாடகத்தை அரங்​கேற்றி வரு​வ​தாக​வும்​, அந்​தக்​ கப்​பலில்​ ​சா​தா​ரண​மான வணி​கப்​ பொருட்​கள்​ மட்​டுமே இருந்​த​தாக​வும்​ ஈ​ரான்​ தரப்​பில்​ விளக்​கம்​ தரப்​பட்​டுள்​ளது. நிக்கி ஹாலேயின் கூற்றுக்கு சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles