அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு கணிசமாகக் குறைந்தது

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பெப்ரவரி இறுதியில் தாக்​குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்​கள் நடை​பெற்​றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால போர்நிறுத்தத்தை அறி​வித்​தார்.

இந்​நிலை​யில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது –

ஈரானில் மொத்​தம் 13,000 இற்கும் மேற்​பட்ட இலக்​கு​களைத் தாக்​கினோம். ஈரான் போரில் 1,000 இற்​கும் மேற்​பட்ட தொமஹக் ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இது அமெரிக்க இராணுவம் ஒவ்​வோர் ஆண்​டும் வாங்​கும் எண்ணிக்​கையை விட 10 மடங்​கு அதி​கம். ஒரு தொமஹக் ஏவு​கணையின் விலை 3.6 மில்​லியன் டொலர்.

இவை தொலை​தூர இலக்​கு​களைத் தாக்​கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000இற்;​கும் மேற்​பட்ட தொமஹக் ஏவுகணை பயன்​படுத்​தப்​பட்​ட​தால், அமெரிக்கா​வின் தொமஹக் ஏவு​கணை​யின் கையிருப்பு 3ஆயிரமாகக் குறைந்​துள்​ளது. இதே​போல், எதிரி விமானங்​கள் மற்​றும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க 1,200 பட்​ரி​யாட் ஏவு​கணை​களை ஈரான் போரில் அமெரிக்கா பயன்​படுத்​தி​யது.

இதன் விலை 4 மில்​லியன் டொலருக்கும் அதிகமாகும். கடந்தாண்​டில் 600 பட்​ரி​யாட் ஏவு​கணை​களை மட்​டுமே அமெரிக்கா உற்​பத்தி செய்​தது. மேலும், வானில் இருந்து தரை இலக்​கு​களை தாக்​கும் 1,100 ஜஸ்​மர் ஏவு​கணை​களை​யும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்​படுத்தி​யது. இதன் காரண​மாக இந்த வகை ஏவு​கணை​கள் அமெரிக்க இராணுவத்​தில் தற்​போது 1,500 மட்​டுமே இருப்​பில் உள்​ளது. இது 600 மைல் தூர​முள்ள இலக்​கு​களைத் தாக்கும். இதன் விலை 1.1 மில்​லியன் டொலர்.

1,000இற்கும் மேற்​பட்ட ஏடிஏசிஎம்​எஸ் என்ற தரை இலக்​கு​களைத் தாக்​கும் ஏவுகணை​களை​யும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்​படுத்​தி​யது. இவ்​வாறு அமெரிக்க இராணுவம் கூறி​யுள்​ளது.

ஈரான் போர் காரண​மாக ஆசி​யா, மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களில் ஆயுத கையிருப்பு குறைந்​துள்​ளது.

ஈரானின் விலை குறைந்த டிரோன் தாக்​குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலை​யுள்ள பட்​ரி​யாட் ரக ஏவுகணைகளைப் பயன்​படுத்​தி​யது. காலி​யான ஆயுதங்​களை மீண்​டும் வாங்க கூடு​தல் நிதி ஒதுக்க வேண்​டும் என அமெரிக்க நா​டாளு​மன்​றத்​தில் பென்​டகன்​ கோரிக்​கை விடுத்​துள்​ளது. இதற்​கு நீண்ட நாட்​களாகும்​ எனத்​ தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles