தனது மூன்று குழந்தைகளுடன் சென்ற தாயின் மோட்டார்சைக்கிள் கல்தடுப்பில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அவரது இரண்டு வயது மகன் உயிரிழந்தான். அவர் படுகாயம் அடைந்தார்.
இந்தச் சம்பவம் மலேசியா ஜாலான் சோங் பான் கெங் சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.45 மணியளவில் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிச் சென்று வீதியோரத்தில் இருந்த கல் தடுப்பில் மோதியதாக செபெராங் பெராய் தெங்கா பொலிஸ் நிலைய உதவி ஆணையர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். 30 வயதான உள்ளுர் பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் தலையில் காயமடைந்தனர்.
புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தக் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது ஏழு வயதுக் குழந்தை சிறு காயங்களுடன் தப்பியது, ஐந்து வயதுக் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில், தாய் தனது மூத்த பிள்ளையைப் பாடசாலைக்கு அழைத்து சென்றார் என கூறப்படுகிறது.
