ஏஐ வருகையால் வேலையிழந்த கோடிக்கணக்கான நபர்கள்!

உலகம் முழுவதும் ஏஐ வருகையால் தொழில்நுட்ப நிறுவனங்களில் என்ட்ரி லெவல் மற்றும் ஜெனரல் ஐடி பணிகளுக்கான தேவை குறைந்து வருகிறது.

அந்தவகையில் முன்பு 250 ஊழியர்களுடன் ஈட்டிய வருவாயை, தற்போது ஏஐ உதவியுடன் வெறும் 50 ஊழியர்களைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஈட்டுகின்றன.

பெரு நிறுவனங்கள் ஏஐ கட்டமைப்பில் கொடிகளை கொட்டும் அதேவேளை ஏஐ பயன்பாட்டை அதிகரித்து ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்ட்டா ஆகியாற்றை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 10% அதாவது சுமார் 8,000 பேரைமே 20 முதல் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும், காலியாக இருந்த 6,000 பணியிடங்களை நிரப்பும் திட்டத்தையும் மெட்டா கைவிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் கடந்த அக்டோபரிலிருந்து இதுவரை 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையே மற்றொரு தொழில்நுட்ப சாம்ராஜ்யமான மைக்கோசாப்ட் தனது 51 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்க ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

இதில் சுமார் 8,750 ஊழியர்கள் வெளியேற வாய்ப்புள்ளது. அதேவேளை 2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 92,000 இற்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்

Glassdoor அறிக்கையின்படி, தொழில்நுட்பத் துறை ஊழியர்களிடையே வேலை குறித்த தன்னம்பிக்கை மிக வேகமாகக் குறைந்து வருவது கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles