ஈரானுடன் மசகு எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்ட சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்குக் கப்பல்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க நிதியமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை நீடித்து நிலைத்து வருவதில், சீனாவில் சுதந்திரமாக இயங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றன.
சீனாவின் ஹெங்லி பெற்றோகெமிக்கல் சுத்திகரிப்பு நிறுவனம்மீதே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சீனாவில் சுதந்திரமாக இயங்கும் இரண்டவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும்.
இதேபோன்று, ஈரானிடம் எண்ணெய் பெறும் சுமார் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா போர் காரணமாகவே இந்தப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசவுள்ளார்.
