ஹோர்முஸ் நீரிணையை ட்ரம்ப் நீரிணை என வெளியிட்ட பதிவால் சர்ச்சை

ஹோர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் உலக மசகு எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்க ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அமெரிக்காவும் மற்ற சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டவிரோத வசூலை அனுமதிக்க முடியாது கூறி வருகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை ‘ட்ரம்ப் நீரிணை’ என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் கேலியான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை, ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ளது. இது, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கிறது. இந்த ஹோர்முஸ் நீரிணை என்பது, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகும்.

இந்த நீரிணை என்பது மிகவும் குறுகியதாகும். அதன் மிகவும் குறுகிய பகுதி, 33 கி.மீ., அகலம் மட்டுமே உள்ளது. அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ., தூரம் மட்டுமே உடையவை. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது.

ஹோர்முஸ் என்ற பெயர், அப்பகுதியில் 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான ‘ஹோர்முஸ்’ நகரிலிருந்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles