மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு – போரதீவுப்பற்று – சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று – மே 02ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 54 வயதான 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை வீட்டு வளவுக்குள் காட்டு யானை நுழைந்துள்ளது. சத்தத்தை கேட்ட பெண் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது யானை அவரைத் தாக்கியுள்ளது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles