த.வெ.க. வசம் 109 இடங்கள் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி

த.வெ.க. 34 தொகுதிகளில் வெற்றியும், 77 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 76 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 தொகுதிகளும் மட்டுமே வசமாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி த.வெ.க. 109, தி.மு.க. கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. தி.மு.க. 2ஆம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளாத்தூரில் தோல்வியை சந்தித்தது துரதிர்ஷ்டவசமானது.

அதுமட்டுமல்லாது திமுகவின் கோட்டை எனப்படும் சென்னை அதன் அனைத்து தொகுதிகளையும் தவெகவிடம் இழந்திருக்கிறது. அதேபோல் தெற்கு, மேற்கு, வடக்கு, டெல்டா என அனைத்து மண்டலங்களிலும் தவெக கோலோச்சியிருக்கிறது.

இந்த நிலையில் “ஊழலற்ற நேர்மையான அரசியல் மாற்றத்தை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டு செயல்படுத்துவார் என்ற விருப்பத்தில் தமிழக இளைஞர்களும், மக்களும் வாக்களித்திருக்கிறார்கள்” என்ற விமர்சனங்கள் பொது வெளியில் உருவாகியுள்ளன.

தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் 4 முனைப் போட்டி என்று சொல்லப்பட்ட நிலையில், நாதக களத்தில் மட்டுமே இருந்தது; மற்றபடி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அங்கே தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு வெற்றி பெற்றிருக்கிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles