சீன பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநக​ர் சாங்ஷாவின் கீழ் உள்ள லியு​யாங் நகரில், ஹுவா ஷெங் பட்டாசு உற்​பத்தி ஆலையில் நேற்று முன்​தினம் பயங்கர வெடி​விபத்து ஏற்பட்​டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற தீயணைப்பு மற்​றும் மீட்​புக் குழு​வினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு​வந்​தனர்.

மேலும் 3 மீட்பு ரோபோக்​களும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டன. இந்த விபத்​தில் 26 பேர் உயி​ரிழந்​த​தாக​வும் 61 பேர் காயமடைந்​த​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். வெடி விபத்து நடந்த இடம் 2 வெடிமருந்து கிடங்குகளுக்கு அருகில் அமைந்​துள்​ள​தால், மீட்புப்படை​யினர் அரு​கிலுள்ள குடி​யிருப்​பாளர்​களை வெளி​யேற்​றி​யுள்​ளனர். சாங்ஷா நகர மேயர் சென் போஷாங் கூறும்​போது, ”விபத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இரங்​கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்​கள் ஆழ்ந்த துயரத்​தி​லும் மனவருத்​தத்​தி​லும் இருக்​கிறோம். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர், பாதிக்​கப்பட்டகுடி​யிருப்​பாளர்​கள் மற்​றும் ஒட்​டுமொத்த சமூகத்​திட​மும் மன்​னிப்​புக் கேட்​டுக் கொள்​கிறேன்” என்றார். இதனிடையே பட்​டாசு உற்​பத்தி நிறு​வனத்​தின் பொறுப்​பாளரை கைது செய்​துள்ள போலீ​ஸார், அவரிடம் வி​சா​ரணை நடத்தி வரு​கின்றனர். மேலும் விபத்​துக்​கான காரணம் குறித்து வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles