மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29 வயதுடைய இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி அவரை வரவழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரியப்படுத்தியமையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
